போதிய பயணிகள் இல்லாததால் இலங்கைக்கு ஒரே நாளில் 4 விமானங்கள் ரத்து

மீனம்பாக்கம்: சென்னை மற்றும் இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு இடையே சென்று வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்சின் 4 விமான சேவைகள், போதிய பயணிகளின் வருகை இல்லாததால் இன்று ஒரே நாளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளன. இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து இன்று அதிகாலை 2.10 மணிக்கும், மாலை 3.05 மணியளவில் சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்துக்கு வந்து சேரவேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்சின் 2 விமான சேவைகள் போதிய பயணிகளின் வருகை இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதேபோல், சென்னை சர்வதேச முனையத்தில் இருந்து இன்று அதிகாலை 3.10 மணிக்கும், மாலை 4.10 மணியளவில் இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்சின் 2 விமான சேவைகளும் போதிய பயணிகள் வருகையின்றி ரத்து செய்யப்பட்டன.

இதன்மூலம், சென்னை-இலங்கை-சென்னை இடையே போதிய பயணிகள் வருகையின்றி, இன்று ஒரே நாளில் கொழும்பு சென்று வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்சின் 4 விமான சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளன. தற்போது கோடை விடுமுறை முடிந்துவிட்ட நிலையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து போனதால், சென்னை-இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு இடையே இன்று ஒரே நாளில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்சின் 4 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வீடு, வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி துவக்கம்: 1 முதல் அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு

கள்ளதொடர்பு விவகாரம்; கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை: கள்ளக்காதலன், கணவர் கைது