கட்சியினருக்கு பரிசாக தந்து ஒய்எஸ்ஆர் காங். ஆட்சியில் 13,800 ஏக்கர் நிலம் மோசடி: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு

திருமலை: ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இயற்கை வளங்களை சுரண்டியதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இயற்கை வளம் சுரண்டப்பட்டது குறித்து அமராவதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நேற்று வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அப்போது விளக்கம் அளித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: ஜெகன் மோகன் ஆட்சியில் நிலங்கள், கனிமங்கள், வனச் செல்வங்கள் சூறையாடப்பட்டது. விசாகப்பட்டினம், ஓங்கோல், திருப்பதி, சித்தூர் மற்றும் மாநில முழுவதும் முக்கிய நகரங்களில் நில அபகரிப்புகள் நடந்தன. 26 மாவட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அலுவலகம் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 ஏக்கர் நிலம் என 33 ஆண்டுகளுக்கு ரூ.300 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆண்டுக்கு ரூ.1000 என குத்தகைக்கு ஒதுக்கீடு செய்து கொண்டனர்.

நில உரிமைச் சட்டம் என்ற பெயரில் நிலத்தை அபகரிக்க சதி செய்தனர். 13,800 ஏக்கர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசால் கட்சித் தலைவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் 40 ஆயிரம் ஏக்கரை குறைந்த விலைக்கு வாங்கினார்கள். நில உரிமை ஆவணம் என்ற பெயரில் பிரச்சாரத்துக்கு ரூ.13 கோடி செலவு செய்தனர். ஜெகன் நில மறு ஆய்வு என்ற பெயரில் ஜெகன் மோகன் படத்தை பட்டாவில் அச்சிட்டார். எதிர்காலத்தில் நில அபகரிப்பு குறித்து மக்களை அச்சமடைய வேண்டாம். நிலங்கள், சொத்துக்கள் அபகரிக்கப்பட்டால் அரசுக்கு புகார் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

கன்னிமாரா நூலகம் (அரிதான நூல்களின் பெட்டகம்)

நாளை த.வெ.க. கட்சி கொடியை அறிமுகப்படுத்துகிறார் விஜய்..!!

ஈரானில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 28 பேர் பலி