சாராஸ் மேளாவில் கலந்து கொள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இணையதளத்தில் பதிவு செய்யலாம்: கலெக்டர் தகவல்

 

திண்டுக்கல், ஏப்.27: மண்டல அளவிலான சாராஸ் மேளாவில் கலந்து கொண்டு உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு விருப்பமுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விவரத்தினை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவற்கு ஏதுவாக ஆண்டுதோறும் மண்டல அளவிலான கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2023-24ம் ஆண்டிற்கான மண்டல அளவிலான சாராஸ் மேளா ஏப்.29ம் தேதி முதல் மே.15ம் தேதி வரை சென்னை தீவுத்திடலில் நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் கீழ் செயல்படும் மகளிர் சுயஉதவிக் குழுக்களை தேர்வு செய்யப்படவுள்ளதால், மண்டல அளவிலான சாராஸ் மேளாவில் கலந்து கொண்டு உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு விருப்பமுள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விவரத்தினை https://exhibition.mathibazaar.com/login என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு தொலைபேசி எண்: 0451-2460050 வாயிலாக அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு