நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு; ஏப். 19ம் தேதி பொதுவிடுமுறை: சிவ்தாஸ் மீனா அரசாணை வெளியீடு!

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப். 19ம் தேதி தமிழ்நாட்டில் பொதுவிடுமுறை என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அரசாணை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. மேலும், விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலும் அன்றைய தினமே நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

மக்களவைத் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் மொத்தம் 68,144 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை தமிழ்நாடு ஆளுநரின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கிணங்க, தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார்.

 

Related posts

காற்று மாசுபாட்டினால் பறிபோகும் உயிர்கள்

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்