நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஜன.8-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் சென்னையில் ஆலோசனை..!!

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஜன.8-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் சென்னையில் ஆலோசனை நடத்தவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தற்போதைய நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த இறுதி வாக்காளர் பட்டியலானது வரும் 22ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பான பல்வேறு ஏற்பாடுகளை ஆய்வு செய்து ஆலோசனை நடத்துவதற்காக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் வரும் ஜனவரி 8ம் தேதி சென்னை வர உள்ளனர்.

சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தல் பணிகளை அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர். மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளை தயார் செய்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருத்தல், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான பணியாளர்களின் பட்டியலை தயாரித்து அவற்றை இறுதி செய்தல், இறுதி வாக்காளர் பட்டியல், பாதுகாப்பு உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகள் குறித்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இறுதிக்கட்ட ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிகள், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டு தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கவுள்ளனர்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்