நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் அமலாக்கத்துறை ரெய்டு இனி அதிகமாக நடக்கும்: கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி

அவனியாபுரம்: நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை ரெய்டு இனி அதிகமாக நடக்கும் என்று கார்த்தி சிதம்பரம் எம்பி தெரிவித்தார். சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் சென்னை செல்வதற்காக நேற்று மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சனாதனம் என்பது சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, குறிப்பாக சாதி ரீதியாக மக்களை மேல்தட்டு, கீழ்தட்டு என பார்ப்பதைத்தான் குறிப்பிடுகிறது. இதை தான் ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசினார். கலைஞரின் பலமே அவர் எந்த ஒரு சமுதாயத்தையும் அடையாளப்படுத்தி கொண்டது கிடையாது. எனவே திமுகவை சாதி அரசியல் கட்சி என கூறும் அண்ணாமலையின் குற்றச்சாட்டு பொருத்தமற்றதாக உள்ளது.

தமிழகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு தொடரும். இனி அடிக்கடி நடைபெறும். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் இ.டி ரெய்டுகள் அதிகமாக தொடரும். வாழ்க்கையில் இதையும் ஒரு பகுதியாக எடுத்து கொள்ள வேண்டியதுதான். ஜி 20 மாநாட்டில் வெளிநாட்டு அதிபர்கள் விருந்து நடக்கும் போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரை அழைப்பது மரபே தவிர, கட்சி தலைவர் என்கிற முறையில் அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி: 3 பேர் மாயம்

18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவனிடம் செல்போன் பறிப்பு: ரவுடி, சிறுவன் கைது