நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணி குறித்து ஆய்வு கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணி குறித்து ஆய்வு கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு, தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள 127 மண்டல குழுக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது குறித்த பயிற்சியும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக மண்டல குழுக்களின் பணி மற்றும் பொறுப்புகள், இப்பயிற்சியில் மண்டல குழுக்களுக்கு வாக்குச்சாவடிகள் தணிக்கை செய்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பார்த்தசாரதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது