நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து நாடாளுமன்றத் தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடந்தவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக 10.7.2024 முதல் 19.7.2024 வரை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவைக்கான பொதுத் தேர்தல் கடந்த 19.4.2024 அன்றும் வாக்கு எண்ணிக்கை 4.6.2024 அன்றும் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து நாடாளுமன்றத் தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிப்பதற்காக சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் 10.7.2024 முதல் 19.7.2024 வரை, கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

10ம் தேதி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் 11ம் தேதி சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை 12ம் தேதி அரக்கோணம், தஞ்சாவூர், திருச்சி 13ம் தேதி சிதம்பரம், மதுரை, பெரம்பலூர் 15ம் தேதி நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி 16ம் தேதி ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர் 17ம் தேதி தென்காசி, தேனி, திண்டுக்கல் 18ம் தேதி பொள்ளாச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் 19ம் தேதி விழுப்புரம், கன்னியாகுமரி, ஆரணி ஆகிய மாவட்டங்களில் ஆலோசனை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தொகுதி வாரியாக நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டங்களில், சம்பந்தப்பட்ட நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கழக வேட்பாளர், கழக செய்தித் தொடர்பாளர்கள், மாவட்டக் கழக முன்னாள் செயலாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அமைப்புகளின் மாநில துணை நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சிக் கழகச் செயலாளர்கள், பகுதிக் கழகச் செயலாளர்கள், கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர்கள், நகர மன்றத் தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் உட்பட மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்

கூட்டம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், அந்தந்த நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள மேற்குறிப்பிட்டுள்ள நிர்வாகிகள் மட்டும் தவறாமல் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

 

Related posts

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

ரயில்வேக்கான தனி பட்ஜெட்டை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும், லோகோ பைலட் காலி பணியிடங்களை நிரப்பாதது தான் விபத்துகளுக்கு முக்கிய காரணம்: ஒன்றிய பாஜ அரசு மீது செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

நீட் தேர்வு வினாத்தாள் கசித்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது ஒன்றிய அரசு: உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்வி