நாடாளுமன்ற தேர்தலில் தோற்பவர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜ: ஈவிகேஎஸ் இளங்கோவன் ெசம கலாய்

ஈரோடு: நாடாளுமன்ற தேர்தலில் யார் கண்டிப்பாக தோற்பார்களோ, அவர்களின் பெயர்களை வேட்பாளர் பட்டியலாக பாஜ வெளியிட்டுள்ளது என ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பாஜ 195 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. யார் கண்டிப்பாக தோற்பார்களோ, அவர்களது பெயர்களை வேட்பாளர்கள் பட்டியலாக பாஜ வெளியிட்டுள்ளது.

தமிழகத்திற்கு பிரதமர் மோடி தொடர்ந்து வந்து செல்வது, நமது ஊரின் சாம்பார் அதிகம் பிடிப்பதால் தான். திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி இல்லை. தொகுதி பங்கீடு சுமூகமாக தான் நடக்கிறது. இரண்டொரு நாளில் எந்தெந்த தொகுதிகளில் யார் போட்டியிடுகிறார்கள் என்ற முழு விவரம் வெளியாகும். இந்த தேர்தலுடன் காங்கிரஸ் காணாமல் போய்விடும் என பிரதமர் மோடி சொல்கிறார். கேடித்தனமாக பேசுகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, மோடியை எங்கு தேடினாலும் கண்டிப்பாக இருக்க மாட்டார். மோடி காணாமல் போய்விடுவார்.

தமிழகத்தில் இருந்து வந்த பணத்தையோ, நிதியையோ, வரியையோ, தமிழகத்தின் வளர்ச்சிக்கு கொடுக்காமல் ஒன்றிய அரசு அதை சுருட்டி கொள்கிறது. பிரதமர் மோடி ரூ.7.50 லட்சம் கோடியை சுருட்டி இருக்கிறார். உலக வரலாற்றில் இவ்வளவு பெரிய அயோக்கியத்தனம், லஞ்ச, ஊழல் எங்கும் நடந்தது இல்லை. அதிமுகவில் எத்தனை சமூக விரோதிகள் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்ற பட்டியலை எடுத்தால், தமிழ்நாட்டில் பாஜவிற்கு பிறகு அதிகமான குற்றவாளிகள் இருப்பது எடப்பாடியோடு தான். இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம் விளக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை