நாடாளுமன்ற தேர்தல்: கேரளாவில் காங்கிரஸ் கட்சி தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ளும்: ஏபிபி-சி வோட்டர் கருத்து கணிப்பில் தகவல்

கேரளா: நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என ஏபிபி-சி வோட்டர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏபிபி-சி வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் கேரளாவில் காங்கிரஸ் கட்சி தனது ஆதிக்கத்தை தக்க வைத்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கேரளாவில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளை கைப்பற்றும் என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றனர். பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்றும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை