நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளி : இதுவரை 15 எம்.பி.க்கள் கூண்டோடு சஸ்பெண்ட்

புதுடெல்லி : நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்டதாக கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், சுப்பராயன், ஸ்ரீகந்தன் உள்ளிட்ட 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் அத்துமீறி இளைஞர்கள் 2 பேர் நுழைந்து முழக்க மிட்டனர். மேலும், வண்ண குண்டுகளையும் வீசினர். இதேபோல் நாடாளுமன்றத்தின் வெளிப்பகுதியில் பெண் உள்பட 2 பேரும் கோஷமிட்டனர். இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு வழக்கம்போல் பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றத்தின் 2 அவைகளும் கூடியது. அப்போது பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து மக்களவை பிற்பகல் 2 மணி வரைஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து மக்களவை 2 மணிக்கு பிறகு மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால் ஜோதிமணி உட்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேரை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன், ஹிபி இடன் ஆகியோர் மக்களவையில் இருந்து நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டார். இதே போல் மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், அவையின் மைய பகுதிக்கு வந்து தொடர்ந்து முழக்கமிட்டார். அவரை நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் முழுவதிலும் இருந்து சஸ்பெண்ட் செய்து துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உத்தரவிட்டார். இதனிடையே மக்களவையில் மேலும் 9 எம்.பி.க்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்..எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது.

இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

▪️ கனிமொழி
▪️ ஜோதிமணி
▪️ சு.வெங்கடேசன்
▪️ மாணிக்கம் தாகூர்
▪️ சுப்பராயன்
▪️ பி.ஆர்.நடராஜன்
▪️ எஸ்.ஆர்.பார்த்திபன்
▪️ பென்னி பெஹனன்
▪️ வி.கே.ஸ்ரீகண்டன்
▪️ முகமது ஜாவேத்
▪️ டி.என்.பிரதாபன்
▪️ டீன் குரியகோஸ்
▪️ ரம்யா ஹரிதாஸ்
▪️ ஹைபி ஈடன்
▪️ டெரிக் ஓ பிரையன்

இதில் ஒன்பது பேர் காங்கிரஸையும், இருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், இருவர் திமுகவையும், ஒருவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி