நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி சிலைகள் அகற்றம்: ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்

டெல்லி: பழைய நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் உள்ள காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி சிலைகள் அகற்றப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்கு அவையின் மொத்த இடங்களில் குறைந்தபட்சம் 10 சதவீத இடங்களில், அதாவது சுமார் 55 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். நடந்து முடிந்த 18வது நாடாளுமன்ற தேர்தலில் 328 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால் அக்கட்சிக்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது.

இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்; சத்ரபதி சிவாஜி மகாராஜ், மகாத்மா காந்தி, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள முக்கிய இடங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. இது ஒன்றிய அரசின் செயல் அட்டூழியம். தலைவர்களின் சிலைகளை அகற்றுவது அராஜகமான நடவடிக்கை, அவர்களை அவமானப்படுத்தும் செயல் என பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது