பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்ற மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

சென்னை: பாரிஸ் ஒலிம்பிக் 10மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்ற மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியா 2வது பதக்கம் வென்றது.

ஒலிம்பிக் 10மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய இணை வெண்கலம் வென்றது. வெண்கலப் பதக்கத்திற்காக நடைபெற்ற போட்டியில் கொரிய இணையை வீழ்த்தி இந்தியாவின் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் இணை வெண்கலப் பதக்கம் வென்றது.

இந்தியா வெங்கல பதக்கம் வென்றதையடுத்து மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கும் இந்திய இணை மனுபாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை எனும் வரலாற்றுச் சாதனை புரிந்த மனுபாக்கர் மற்றும் இந்தியாவிற்கு இரண்டாவது வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்த சக வீரர் சரப்ஜோத் சிங் ஆகியோர் அடுத்தடுத்து வெற்றிவாகை சூட எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்