பாரிஸ் நகரில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அரங்கம் திறப்பு: இந்திய தூதர் ஜாவத் அஷ்ரப் திறந்து வைத்தார்

சென்னை: பாரிஸில் புகழ்பெற்ற ஐஎப்டிஎம் டாப் ரேசா 2024 சுற்றுலா வர்த்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கை பிரான்ஸ் நாட்டிற்கான இந்திய தூதர் ஜாவத் அஷ்ரப் திறந்து வைத்தார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சமயமூர்த்தி முன்னிலை வகித்தார்.

தமிழ்நாட்டின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய 5 வகை நிலப்பகுதிகளில் அமையப்பெற்ற புகழ் பெற்ற சுற்றுலாத்தலங்களை விளக்கும் வகையிலான அரங்கத்தில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு காளை மற்றும் காளையை தழுவி நிற்கும் வீரனின் சிலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அரங்கத்தை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு தமிழ்நாட்டின் சிறப்புகளை அறிந்தனர். இந்நிகழ்ச்சியில் இந்திய சுற்றுலாத்துறை உதவி இயக்குநர் மோனிகா ஜாம்வால், இந்திய தூதரக அலுவலர்கள், சுற்றுலாத்துறை அலுவலர்கள், சுற்றுலாத் தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்