பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டி வெண்கலம் சுட்டார் ரூபினா: இந்தியாவுக்கு 5வது பதக்கம்

பாரிஸ்: மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியின் மகளிர் துப்பாக்கிசுடுதலில், இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் வெண்கலப் பதக்கம் வென்றார். பி2 – மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்எச்1 பிரிவில் நேற்று பங்கேற்ற ரூபினா (25 வயது, ஜபல்பூர் ம.பி.) மொத்தம் 211.1 புள்ளிகள் குவித்து 3வது இடம் பிடித்தார்.

ஈரான் வீராங்கனை ஜவன்மார்டி சரே 236.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். துருக்கியின் ஓஸ்கன் அய்செல் (231.1) வெள்ளி வென்றார். பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 5வது பதக்கம் இது. இவற்றில் 4 பதக்கங்கள் (1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம்) துப்பாக்கிசுடுதலில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

* ஆண்கள் பேட்மின்டன் ஒற்றையர் எஸ்எல் 3 ஏ பிரிவில் களமிறங்கிய இந்திய வீரர் நிதிஷ் குமார் 21-13, 21-14 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் புன்சன் மாங்க்கோனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

* ஆண்கள் பேட்மின்டன் ஒற்றையர் எஸ்எல் 4 பி பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் சுகந்த் கடம் 21-12, 21-12 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் டீமர்ரோம் சிரிபோங்கை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!