பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து காலிறுதி முந்தைய சுற்றுக்கு தகுதி..!!

பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறினார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் இந்தியா இதுவரை 2 பதக்கங்கள் (2 வெண்கலம்) வென்று அசத்தியுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 6வது நாளான இன்று இந்திய வீர்ரகள் பங்கேற்று வருகின்றனர். இன்று பி.வி. சிந்து (இந்தியா) – கிறிஸ்டின் கூபா (எஸ்தோனியா) பெண்கள் ஒற்றையர் லீக் சுற்றில் பகல் 12.50 மணிக்கு நடைபெற்றது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் பேட்மிண்டனில் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, எஸ்டோனியாவின் கிறிஸ்டின் குபா உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பி.வி.சிந்து வெற்றி பெற்றார். 21-5, 21-10 என்ற நேர் செட் கணக்கில் (2-0 செட் கணக்கில்) எஸ்தோனியாவை வீழ்த்தினார். பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறினார். ரவுண்ட் ஆப் 16 சுற்றில் பி.வி.சிந்து, சீனாவின் ஹி பிங் ஜியாவோவை எதிர்கொள்கிறார்.

Related posts

தமிழகம் முழுவதும் சிறப்பு குழு அமைத்து ஆதிதிராவிட மாணவ விடுதியில் வசதியை சீர் செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

நித்தியானந்தாவை போல் பிரபலமாக ஆசை என் கனவில் சித்தர்கள் சொன்னதைத் தான் பேசினேன்

ஆதிதிராவிடர் நலத்துறை நிதியில் 97.6% செலவு செய்யப்பட்டுள்ளது: எடப்பாடிக்கு அமைச்சர் கயல்விழி பதிலடி