பரங்கிமலை நசரத்புரம் பகுதியில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

ஆலந்தூர்: பரங்கிமலை நசரத்புரம், பரங்கிமலை கன்டோண்மென்ட் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியாகும். இங்கு கடந்த 25 ஆண்டுகளாக தூய்மை பணியாளர்கள் உள்பட 14க்கும் மேற்பட்ட குடும்பதினர் வீடு கட்டி வசித்து வந்தனர். இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்ய வேண்டும், என கன்டோண்மென்ட் நிர்வாகம் நோட்டீஸ் வழங்கி இருந்தது. இந்நிலையில், கன்டோண்மென்ட் நிர்வாகத்தினர் நேற்று போலீசார் உதவியுடன் பொக்லைன் வாகனத்துடன் அங்கு வந்து, வீடுகளை இடிக்கும் பணியை தொடங்கினர்.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பொக்லைன் வாகனத்தை சிறைபிடித்தனர். ஆனால், போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி, வீடுகளை இடிக்க தொடங்கினர். அப்போது, உடமைகளை எடுக்க அவகாசம் வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு கன்டோண்மென்ட் அதிகாரிகள் அனுமதி, திரும்பி சென்றனர்.

Related posts

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்