பரமக்குடியில் லாரி மீது பஸ் மோதி 22 பயணிகள் காயம்

*டிரைவருக்கு கால் முறிவு

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இருந்து பார்த்திபனூர் வழியாக வீரசோழனுக்கு அரசு பஸ் சென்றது. கமுதக்குடி அருகே சென்றபோது, முன்னாள் சென்ற டிப்பர் லாரி டிரைவர் சாலையின் குறுக்கே டூவீலர் சென்றதால் திடீரென பிரேக் பிடித்துள்ளார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ், டிப்பர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்ஸின் முன் பகுதியில் அமர்ந்திருந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.

அண்டக்குடியைச் சேர்ந்த அரசு பேருந்து டிரைவர் தங்கத்தின் கால் முறிந்தது. மேலும் பேருந்தில் பயணம் செய்த 12 பேருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. அவர்கள், 108 வாகனங்கள் மூலம் மீட்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.டிரைவர் தங்கம் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தூத்துக்குடியில் மீராசா என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்

திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற பயணிகள் ரயில் எஞ்சினில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு

திருமங்கலம் அருகே கார் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி பலி