பாராலிம்பிக்கில் இந்தியா முதலிடம் பிடிக்கும்…மாரியப்பன் நம்பிக்கை

தொடர்ந்து மூன்று முறை பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளேன். தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று முறையும் பதக்கம் வென்றுள்ளது மிகவும் பெருமையாக உள்ளது. பாரிசில் இந்த முறை மீண்டும் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்று சென்றேன். ஆனால், போட்டிக்கு முன்பு ஏற்பட்ட உடல்நலக் குறைவால், தங்கப்பதக்கம் வெல்ல முடியவில்லை. ஒன்றிய, மாநில அரசுகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பயிற்சியாளர்கள் எனக்கு தேவையான உதவிகளையும், வசதிகளையும் செய்து கொடுத்தனர்.

அனைவருக்கும் நன்றி. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 2016ம் ஆண்டு பாராலிம்பிக்கில் பங்கேற்கும்போது, தமிழகத்தில் அதிகமானோருக்கு பாராலிம்பிக் பற்றி விழிப்புணர்வு இல்லை. தற்போது விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைவருக்கும் ஊக்கமும் உதவியும் அளித்து, எங்களை பாராலிம்பிக் போட்டிக்கு அனுப்பி வைத்தார்.

தமிழகத்தில் இருந்து சென்ற நான்கு பேரும் பதக்கங்களை வென்றுள்ளோம். மேலும், அரசு துறையில் வேலைவாய்ப்புகள் கேட்டிருந்தேன். அதையும் கொடுப்பதாக நம்பிக்கை அளித்துள்ளனர். தற்போது தமிழகத்திலிருந்து அதிகப்படியான வீரர், வீராங்கனைகள் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகின்றனர். இந்தியா சார்பாக பங்கேற்றவர்கள், 29 பதக்கங்களை வென்றுள்ளனர். அதில் தமிழகத்தில் இருந்து நான்கு பதக்கங்கள் வென்றுள்ளோம், அடுத்தடுத்து வரும் பாராலிம்பிக்கில் இந்தியா பதக்க பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என நம்புகிறேன். மாரியப்பன் தங்கவேலு

Related posts

பிடி இறுகுகிறது

நாளை அமெரிக்கா பயணம் மோடி, பைடன் சந்திப்பில் 2 ஒப்பந்தம் கையெழுத்தாகிறது: வெளியுறவு செயலாளர் தகவல்

தொடர்ந்து 2வது நாளாக தாமதமாக புறப்பட்ட சிங்கப்பூர் விமானம்: பயணிகள் கடும் அவதி