பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்ற நித்யஸ்ரீ சிவனுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை : பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்ற நித்யஸ்ரீ சிவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நித்யஸ்ரீ சிவனின் திறமை, கடினமான உழைப்பு நமது அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளது என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. பேட்மிண்டனில் இன்று(செப்.03) தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை நித்யஸ்ரீ சிவன் இந்தோனேசியா வீராங்கனை ரினா மர்லினாவை 21-14, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

இந்நிலையில் பதக்கம் வென்ற நித்யஸ்ரீ சிவனுக்கு முதல்வர் மு.கஜ.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “பாராலிம்பிக்ஸ்2024ல் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் SH6 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்யா ஸ்ரீ சிவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

உங்கள் சிறந்த சாதனை உங்கள் மகத்தான திறமை, ஆர்வம் மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்துகிறது. நீங்கள் எங்கள் அனைவரையும் பெருமைப்படுத்துகிறீர்கள்” என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் தமிழக வீராங்கணைகளான துளசிமதி வெள்ளி பதக்கமும், மணிஷா ராதாஸ் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு