பாப்பாரப்பட்டியில் ராகி விளைச்சல் அமோகம்

*ஓரிரு வாரத்தில் அறுவடை துவங்கும்

பாப்பாரப்பட்டி : தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில். விவசாயிகள் சாகுபடி செய்த ராகி பயிரை, அரசு சார்பில் கொள்முதல் நிலையங்களை துவக்கி கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகள் மானாவாரி நிலங்களில் பரவலாக ராகி சாகுபடி செய்துள்ளனர்.

பாப்பாரப்பட்டி அடுத்த மாதேஹள்ளி கிராமத்தில், விவசாயிகள் சாகுபடி செய்துள்ள ராகி பயிர்கள் செழித்து வளர்ந்து, கதிர் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ளது. ஓரிரு வாரங்களில் ராகி அறுவடை தொடங்கும். அரசு கொள்முதல் நிலையங்களில் நல்ல விலை கிடைப்பதால், நேரடியாக விற்பனை செய்து லாபம் பெறலாம் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் மரணம் பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பு: கமல்ஹாசன் இரங்கல்

ஆம்ஸ்ட்ராங் மரணம்: அஞ்சலி செலுத்த நாளை சென்னை வருகிறார் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி!!

பாஜக மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது..!!