வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பங்குனி உற்சவம்: திரளான பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீபெரும்புதூர்: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பங்குனி கிருத்திகை உற்சவத்தில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற இக்கோயில் கருவறையில் முருகப்பெருமான் கம்பீரமாக 7 அடி உயரத்துடன் காட்சியருளுகின்றார்.

பல சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் பங்குனி மாத கிருத்திகையினை முன்னிட்டு, மூலவர் ஸ்ரீ வள்ளி – தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி உற்சவருக்கும் பால் அபிஷேகம் நடைபெற்றது. கருவறையில் உள்ள ஸ்ரீ வள்ளி – தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவர் முருகப்பெருமானுக்கு ரத்தினாங்கி அணிவிக்கப்பட்டு, மலர் அலங்காரத்தில் எழுந்தருளி சஷ்டி மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியருளினார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வல்லக்கோட்டை முருகப்பெருமானை வழிபட்டனர்.மேலும், தமிழகம் முழுவதும் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கோடை காலத்தை முன்னிட்டு, நீர் மோர் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பிகே.சேகர்பாபு அறிவித்தார்.

அதன்படி, வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு கோடை காலத்தை முன்னிட்டு, கோயில் நிர்வாகத்தின் சார்பில் மோர், குடிநீர் ஆகியற்றை கோயில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் தலைமையிலான ஊழியர்கள் வழங்கினார்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு