பன்னீர் அல்வா

தேவையான பொருட்கள் :

பன்னீர்- 1 கப்
பால் – 1/2 கப்
சர்க்கரை – 1/2 கப்
ஏலக்காய் பொடி – 1 கப்
நெய் – 1 டீஸ்பூன்
முழு பாதாம் பருப்பு – 8 முதல் 9
நறுக்கிய பாதம் துண்டுகள் – 1 டீஸ்பூன்

செய்முறை :

முதலில் பன்னீரை எடுத்து அதனை பீஸ் பீஸாக பிசைந்து கொள்ளவும். தேவையானால் நீங்கள் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக வெட்டியும் பயன்படுத்தலாம்.இப்போது நாம் பிசைந்து வைத்த பன்னீரை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனை அரை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அது சூடானதும் அதில் தேவையான அளவு நெய் ஊற்றவும். நெய் உருகியதும் அதில் நாம் அரைத்து வைத்த பன்னீரை சேர்த்து ஒரு சில நிமிடங்களுக்கு வறுக்கவும். பன்னீர் லேசான பிரவுன் நிறமாக மாறியவுடன் அதில் பால் சேர்க்கவும்.நாம் சேர்த்த பால் நன்றாக சுண்டி வரும் போது தேவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்றாக கிளறவும். இப்போது கடாயை மூடி 5 நிமிடங்களுக்கு வேக வைத்துக் கொள்ளலாம். இடை இடையே அடிப்பிடிக்காமல் இருக்க கிளறி விட வேண்டும்.பால் முழுவதுமாக வற்றி அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறி கொண்டே இருக்க வேண்டும். இப்போது அடுப்பை அணைத்து ஏலக்காய் தூள், நறுக்கி வைத்த பாதாம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.ஓரளவு ஆறியதும் பன்னீர் அல்வாவை கிண்ணங்களில் சேர்த்து அதன் மீது முழு பாதாம் பருப்பு வைத்து கார்னிஷ் செய்து பரிமாறவும். ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும், திரும்பி திரும்பி நாக்கில் டேஸ்ட் ஒட்டி கொண்டு சாப்பிட வைக்கும். மறக்காம ட்ரை பண்ணுங்க மக்களே!

 

Related posts

கோதுமை ரவை புலாவ்

ஜவ்வரிசி உப்புமா

மிக்ஸ்டு வெஜிடபிள் சப்பாத்தி