தென்காசி அரசு மருத்துவமனையில் பரபரப்பு: லிப்டில் சிக்கிய 4 பேரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

தென்காசி: தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள லிப்டில் சிக்கிய 4 பேரை தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு மீட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் மாவட்ட அரசு மருத்துவமனை இயங்கி வருகின்றது.தென்காசி மாவட்டம் முழுவதிலும் இருந்தும் தினமும் சுமார் 1,500 முதல் 2,000 புறநோயாளிகள் இங்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்று வருகின்றனர்.

உள் நோயாளிகளாகவும் அதிகமானோர் இங்கு சிகிச்சை பெறுகிறார். பிரசவ வார்டிலும் தினமும் சுமார் 8 முதல் 10 பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன, இது போன்ற ஒரு சூழலில் இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இயங்கி வரும் லிப்ட் இன்று மதியம் திடீரென பழுதானது அந்த சமயத்தில் அந்த லிப்டிற்குள் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த 2 நோயாளிகள் உட்பட 4 பேர் லிப்டில் இருந்துள்ளனர்.

இந்த லிப்ட் இறங்கி வந்து கொண்டிருக்கும்போது இடையில் நின்று விட்டது, பின்னர் அவர்கள் உள்ளே இருந்து அவரகள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உறவினர்கள் மருத்துவர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து அந்த பழுது ஏற்பட்ட இடத்தில் அவரகள் அதை உடைத்து அந்த 4 பேரை காப்பாற்றினார். தென்காசி அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை