பந்தலூரில் அரசு பஸ்சில் படியில் தொங்கியபடி செல்லும் மாணவர்கள்: சிறப்பு பஸ்கள் இயக்க கோரிக்கை

பந்தலூர்: பந்தலூரில் அரசு பேருந்துகளில் பஸ்களில் படிகளில் தொங்கிக் கொண்டு மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதை தவிர்க்க காலை, மாலை நேரங்களில் சிறப்பு பஸ்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் பகுதியில் பள்ளி, கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்கும் விதமாக அரசு போக்குவரத்து கழகம் கூடலூர் கிளை சார்பில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பல்வேறு வழித்தடங்களில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களில் பயணிகளுடன் முண்டியடித்து கொண்டு ஏறி மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர்.

சில நேரங்களில் பஸ்களில் அளவுக்கு அதிகமாக பயணிகள் பயணிப்பதால் மாணவர்கள் ஆபத்தை உணராமல் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். எனவே அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாணவர்கள் பயணம் செய்வதற்கு வசதியாக காலை, மாலை நேரங்களில் சிறப்பு பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Related posts

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தலைவராக ககன் நரங் அறிவிப்பு