ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை

கூடுவாஞ்சேரி: கீரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியில் நேற்று மாலை ஏசிடிஎஸ் சமூகசேவை நிறுவனம் சார்பில் ஸ்மார்ட் வகுப்பறை திறக்கப்பட்டது. இதன்மூலம் அங்கு படிக்கும் ஏராளமான மாணவ-மாணவிகள் பயன்பெறுகின்றனர்.கூடுவாஞ்சேரி அருகே கீரப்பாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சுமார் 380க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர்.

இப்பள்ளி மாணவர்களின் கல்வி கற்றல் திறனை மேம்படுத்த, நவீன ஸ்மார்ட் வகுப்பறை துவங்க திட்டமிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, இப்பள்ளி வளாகத்தில் நேற்று மாலை ஒரு தனியார் நிறுவனத்தின் நிதியுதவியில், ஏசிடிஎஸ் சமூகசேவை நிறுவனத்தின் சார்பில் ஸ்மார்ட் வகுப்பறை துவக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வசுந்தரி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர்கள் எத்திராஜ், சசிகலா, லலிதா, வனிதா, உமா, ஊராட்சி செயலர் வரதராஜன் ஆகியோர் முன்னில வகித்தனர். ஏசிடிஎஸ் சமூகசேவை நிறுவனர் தேவன்பு விளக்க உரையாற்றினார். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நிதியுதவி வழங்கிய தனியார் நிறுவனத்தின் நிர்வாகிகள் சுப்புராமன், கவிதா, பூங்கொடி ஆகியோர் பங்கேற்று, ரூ.2.50 லட்சம் மதிப்பில் ஒன்று முதல் 5ம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறையைத் துவக்கி வைத்தனர். இதன்மூலம் அப்பள்ளி மாணவர்கள் கல்வி கற்றல் திறனை மேம்படுத்தி பயன்பெறுகின்றனர். முடிவில், ஏசிடிஎஸ் சமூகசேவை நிறுவன திட்ட அலுவலர் பிரின்ஸ் நன்றி கூறினார்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

ஜூலை-06: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை