ஊராட்சி தலைவரை பணி செய்யவிடாமல் தடுத்த துணை தலைவர், வார்டு உறுப்பினர்களின் அதிகாரங்கள் பறிப்பு: காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவு

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், பூசிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள் பதவியேற்று பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு தேர்வான துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள், பூசிவாக்கம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவதற்கு ஊராட்சி மன்ற தலைவரின் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்காமல் முட்டுக்கட்டையாக இருந்து வந்துள்ளனர். இதனால், காரணமாக ஊராட்சி மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், கிராம மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் ஊராட்சி மன்ற தலைவர் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தார். அதன்பேரில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். சிவாக்கம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடம் துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 204 (3ன்) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிகளின் ஆய்வாளராக உள்ள மாவட்ட கலெக்டர், பூசிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர்களுக்கு 6 மாத காலத்திற்கு கிராம ஊராட்சியின் நிர்வாகம் மேற்கொள்ளும் சிறப்பு அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் தவித்து வரும் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!