பெரியகுப்பத்தில் உள்ள கோயிலில் பஞ்சலோக சிலை திருட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் பெரியகுப்பம் வள்ளலார் தெருவில் வள்ளல் விநாயகர் ஆலயம் உள்ளது. இக்கோயிலில் முருகர், தெய்வானை வள்ளி ஆகிய 3 பஞ்சலோக சிலைகள் இருந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு வைக்கப்பட்டிருந்த சிலைகளில் வள்ளியம்மை பஞ்சலோக சிலை தீடீரென காணாமல் போனதைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோவில் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோவிலுக்குள் முதியவர் ஒருவர் சாமி கும்பிடுவது போல் கோயிலில் இருந்த சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான முருகர் தெய்வானை வள்ளி ஆகிய 3 பஞ்சலோக சிலைகளில் சுமார் ஒன்றரை அடி உயரம் 10 கிலோ எடையுள்ள வள்ளியம்மை சிலையை எடுத்துக்கொண்டு தனது கோணிப்பையில் போட்டு அதில் கொம்பை சொருகி தனது தோள்பட்டையில் சுமந்தவாறு சாலையில் நடந்து செல்வது சிசிடிவி காட்சி மூலம் ெதரியவந்தது.

இந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் திருவள்ளூர் டவுன் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே முதியவர் சிலையை சுமந்தபடி சாலையில் செல்லும் சிசிடிவி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்