சுருள் அப்பம்

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி – 1 கப்
துருவிய தேங்காய் – 1 1/2 கப்
சர்க்கரை – 1/2 கப்
உப்பு – 3/4 டீஸ்பூன்
சமையல் சோடா – 1 சிட்டிகை
எண்ணெய் – 1-2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் இட்லி அரிசியை 2 முறை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் அந்த அரிசியை 2-3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் ஊற வைத்துள்ள அரிசியை நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மாவானது நன்கு நீர் போன்று இருக்க வேண்டும். அதாவது ரவா தோசை மாவு பதத்தில் இந்த மாவு இருக்க வேண்டும். பிறகு அதில் சமையல் சோடாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, டிஷ்யூ பேப்பர் கொண்டு தடவி விட வேண்டும். அடுத்து தயாரித்து வைத்துள்ள மாவை வெளியில் இருந்து உள்ளே தோசையாக சுட வேண்டும். (பொதுவாக தோசையை உள்ளிருந்து வெளியே சுற்றுவோம். ஆனால் இதில் தலைகீழாக செய்ய வேண்டும்.) பின் அதில் எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் நன்கு வேக வைத்து, ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அந்த தோசையின் மேல் துருவிய தேங்காய் மற்றும் சர்க்கரையைத் தூவி விட வேண்டும். இறுதியாக அதை சுருட்டினால், சுவையான சுருள் அப்பம் தயார். இதேப் போல் மீதமுள்ள மாவையும் செய்ய வேண்டும்.

Related posts

ராகி சாக்லெட் கேக்

ஸ்பைசி இட்லி மஞ்சூரியன்

முந்திரி சப்ஜி