பாணாவரம் அருகே சேரும் சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டும்

*பொதுமக்கள் கோரிக்கை

பாணாவரம் : பாணாவரம் அருகே போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் சேதம் அடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த தப்பூர் ஊராட்சிக்கு உட்பட்டது கோவிந்தாங்கல் கிராமம். போளிப்பாக்கம்-குன்னத்தூர் பிரதான சாலையின் ஓரம் இக்கிராமத்தின் இணைப்பு சாலை உள்ளது. இவ்வழியாக, பழையபாளையம், தப்பூர், குன்னத்தூர், போளிப்பாக்கம், கூடலூர், பாணாவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பணி நிமித்தமாக பல்வேறு தரப்பினர் தினமும் சென்று வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக இக்கிராமத்தின் இணைப்பு சாலை குண்டும், குழியுமாகவும், மழைநீர் தேங்கியும், சேரும், சகதியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்று உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகங்கள், மருத்துவமனைக்கு செல்வோர் அவசரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படும் சூழல் உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேரும், சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்