பான் அமெரிக்கா 1250 என்ற அட்வென்சர் பைக்கை அறிமுகம் செய்தது ஹார்லி டேவிட்சன் நிறுவனம்..!!

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் , பான் அமெரிக்கா 1250 என்ற அட்வென்சர் பைக்கை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் ஒரே ஒரு வேரியண்ட்தான் உள்ளது. 6 நிறங்களில் கிடைக்கும். இதில் 1252 சிசி பிஎஸ்6 இன்ஜின் இடம்பெற்றுள்ளது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. இந்த இன்ஜின், அதிகபட்சமாக 150.19 பிஎச்பி பவரையும், 128 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

பைக்கின் எடை 258 கிலோ. டேங்க் கொள்ளளவு 21.2 லிட்டர். ஹோரூம் விலையாக சுமார் ரூ.24,49,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பிஎம்டபிள்யூ ஆர் 1250 ஆர்டி, டிரையம்ப் டைகர் 1200 ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்