பாம்பன் பாலத்துக்கு ரூ.38 லட்சம் இ.பி. பில் பாக்கி: தேசிய நெடுஞ்சாலை துறை கட்டாததால் பவர் கட், இருளில் மூழ்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் – மண்டபத்தை இணைக்கும் வகையில் கடலில் சாலைப்பாலம் அமைந்துள்ளது. பாலத்தின் இரு பக்கத்திலும் நடைமேடையில் மின்விளக்குகளுடன் கூடிய 181 மின்கம்பங்கள் உள்ளன. இரவு நேரத்தில் இந்த விளக்குகளால் பாலம் பகல் போல் வெளிச்சத்தில் மிளிரும். சாலைப்பாலம் பயன்பாட்டுக்கு வந்த காலத்தில் இருந்து மின் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறையே செலுத்தி வந்துள்ளது.

தற்போது, பாம்பன் சாலை பாலத்தில் மின்விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பாம்பன் சாலை பாலத்திற்கு கடந்த 2016ல் இருந்து நடப்பாண்டு வரை உள்ள மின் கட்டணம் ரூ.38 லட்சத்துக்கு மேல் செலுத்தாமல் பாக்கியாக உள்ளது’’ என்றனர்.

Related posts

குமரி: சுற்றுலா படகு சேவை தாமதமாக தொடங்கியது

பகுத்தறிவுப் பகலவனுக்குப் புரட்சி வணக்கம்: பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் பதிவு

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குற்றாலத்தில் கார் பார்க்கிங் அதிக தொகைக்கு ஏலம்