பள்ளிப்பட்டில் அரசு மணல் குவாரி மீண்டும் திறப்பு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டில், அரசு மணல் குவாரி மீண்டும் திறக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் தமிழ்நாடு அரசின் சார்பில் மணல் குவாரி அமைக்கப்பட்டு அங்கு மணல் விற்பனை நடைபெற்று வருகின்றது. கடந்த மாதம் 12ம் தேதி இந்த மணல் குவாரியில் அமலாக்க துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 26 நாட்களாக மணல் குவாரி மூடப்பட்டு விற்பனை நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் வீடு கட்டுவோர் மணல் கிடைக்காமல் கட்டிடப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், மீண்டும் நேற்று முதல் இந்த மணல் குவாரி திறக்கப்பட்டு மணல் விற்பனை மீண்டும் தொடங்கியது. இதனால் வீடு கட்டுவோர், கட்டிட தொழிலாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

தொழிலாளி கொலை வழக்கில் 8 பேர் கைது

ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல மனுத் தாக்கல்

குமரியில் கனமழை காரணமாக உப்பு விலை உயர்வு