கோவையில் பாலஸ்தீனம் கொடி கட்டி ஆர்ப்பாட்டம்: 3 பேர் மீது வழக்கு

கோவை: கோவை உக்கடம் பகுதியில் கடந்த 24ம் தேதி அனைத்து ஜமாத், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மேம்பாலத்தின் மீது ஏறி 3 பேர் தடையை மீறி போராட்டம் நடத்தினர். மேம்பாலத்தின் மீது பாலஸ்தீன கொடியும் கட்டினர். அவர்கள் ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பை சேர்ந்த சபீர் அலி, மனித நேய ஜனநாயக கட்சியை சேர்ந்த அபுதாஹிர், ரபீக் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறாக போக்குவரத்து பாதிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அத்துமீறல், இடையூறு ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உக்கடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மேம்பாலத்தின்மீது பாலஸ்தீன கொடி கட்டப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. இந்நிலையில், கோவை டாடாபாத் பகுதியில் பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு அரசியல் கட்சிகள் மற்றும் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்காரிய, இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இஸ்ரேலுக்கு பக்கபலமாக இருக்கும் அமெரிக்காவை கண்டித்தும், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்திய பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

 

Related posts

பிணையில் வருபவர்களிடம் கூகுள் லோகேஷன் கோரி நிபந்தனை விதிக்க கூடாது: காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் ஆணை

விழுப்புரம் மாவட்டத்தில் 21 சமூக நீதி போராளிகளுக்கு ரூ.5.7 கோடியில் நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது: தமிழ்நாடு அரசு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 3 பேரை ஜூலை 19 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு