பாலஸ்தீன போராட்டம் நடத்த முயன்ற இந்திய பெண் கேரளா செல்ல சிங்கப்பூர் நீதிமன்றம் அனுமதி

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மற்ற நாடுகளின் விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த அனுமதியில்லை. குறிப்பாக இஸ்ரேலுடன் சிங்கப்பூர் நெருக்கமான உறவு கொண்டிருப்பதால் காசா விவகாரத்தில் போராட்டங்களை நடத்த கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இந்திய வம்சாவளியான கோகிலா பார்வதி அண்ணாமலை (35) என்பவர் 2 நபர்களுடன் சேர்ந்து அனுமதியின்றி பாலஸ்தீன ஆதரவு போராட்டம் நடத்த ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள பார்வதி கேரளாவில் உள்ள தனது தாத்தா, பாட்டியை சந்திக்க அனுமதி கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கச் செய்திருந்தார். பிப்ரவரிக்கு முன்பாக திட்டமிட்ட பயணம் இது என்பதால் நீதிமன்றம் அவருக்கு 10,000 சிங்கப்பூர் டாலர் பிணையுடன் கேரளா செல்ல அனுமதி வழங்கி உள்ளது.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்