பழனி முருகன் கோயிலின் கிரி வல பாதையில் ஆக்கிரமிப்பை அகற்ற ஆணை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பழனி முருகன் கோயிலின் வல பாதையில் ஆக்கிரமிப்பை முற்றிலும் அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள், கிரிவல பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு ஐகோர்ட் கிளை நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோதமாக செயல்படும் வணிகரீதியான அனைத்து வியாபார நடவடிக்கையை முற்றிலும் அகற்ற ஆணையிட்டது. மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அனைத்து நடவடிக்கையையும் எடுக்க கோயில் ஆணையர், வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டது. ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி வீ.பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related posts

அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்

வினாத்தாள் கசிவு: ம.பி.யில் 10 ஆண்டு சிறை

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி