பழநி மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில் திருக்கம்பம் சாட்டுதல் நிகழ்வு

*ஏராளமானோர் பங்கேற்பு

பழநி : பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் கிழக்கு ரதவீதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இத்திருவிழா கடந்த பிப்.9ம் தேதி இரவு முகூர்த்தக்கால் ஊன்றுதலுடன் துவங்கியது. நேற்றிரவு திருக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு திருக்கம்பம் சாட்டப்பட்டது. கம்பம் சாட்டுதலையொட்டி மாரியம்மனுக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்நிகழ்வில் நகர முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வரும் பிப்.27ம் தேதி இரவு 7.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் சிம்ம லக்னத்தில் கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடைபெறும். பிப்.28ம் தேதி மாலை 4.30 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு வண்டிக்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்.29ம் தேதி கொடியிறக்குதலுடன் விழா முடிவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் பாரதி தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?