பாலக்காடு காடாம்கோட்டில் அம்மன் கோயில் பிரதிஷ்டை தினவிழா: மூன்று யானைகள் மீது அம்மன் வீதியுலா

பாலக்காடு: பாலக்காடு காடாம்கோட்டில் அம்மன் கோயில் பிரதிஷ்டை தின விழா வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது. பாலக்காடு சித்தூர் சாலையில் காடாம்கோடு அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்தாண்டின் பிரதிஷ்டை தினவிழா அம்மன் கோயிலில் நேற்று நடைபெற்றது. இதில், சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்தி கடன்கள் செலுத்தி வழிபட்டனர். கோயில் நடை காலை 4 மணிக்கு திறக்கப்பட்டு அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. காலை 9 மணிக்கு வளாகத்தில் அலங்கரித்த யானைகள் மீது அம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மதியம் உச்சிக்காலப்பூஜைகள் சிறப்பாக நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மணப்புள்ளிக்காவு அம்மன் கோயிலிலிருந்து மூன்று யானைகள் அலங்காரத்துடன் யானை மீது அம்மன் வீற்றிருந்து பஞ்சவாத்யங்கள் அதிர வீதியுலா வந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்த வீதியுலாவில் பக்தர்கள் கார்த்திகை தீபங்கள் ஏற்றி வழிப்பட்டனர்.

Related posts

மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்!

இரண்டு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 63 பேர் பரிதாப பலி: திரிசூலி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சோகம்

விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை: காலை 11 மணிக்கு முடிவு தெரியும்