பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

சென்னை: பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும், பக்ரீத் பண்டிகை ஜூன் 29ம் தேதி நாளை கொண்டாடப்படவுள்ளது. உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகைகள் நடத்தப்படுவதோடு புத்தாடை அணிந்தும், தங்கள் வீட்டிகளில் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனின் பெயரால் பலியிட்டு அவற்றை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இதனை ஈகைத் திருநாள் என்றும் கூறுவர்.

மேலும் பண்டிகையை கொண்டாடும் விதமாக இன்று சென்னையில் இருந்தும், பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் போக்குவரத்துக்கு கழகம் சார்பில் சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் மற்றும் பெங்களூருவில் இருந்தும் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Related posts

ஆக.11-ம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடைபெறும்: தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு

ஜூலை 11-க்குள் வேட்பாளர் செலவு கணக்கை தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்க உத்தரவு!!

உதகையில் படகு ஓட்டுனர்கள் திடீர் வேலை நிறுத்தம்: படகு சேவை பாதிப்பு