இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியை பாகிஸ்தான் என நீதிபதி விமர்சனம் : மன்னிப்பு கோரியதை குறிப்பிட்டு வழக்கு முடித்து வைப்பு!!

டெல்லி : பெங்களூரில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியை மினி பாகிஸ்தான் என்றும், பெண் வழக்கறிஞரிடம் அநாகரீக கருத்துகளை கூறிய விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. தலைமை நீதிபதி சந்திரசூட் பிறப்பித்த உத்தரவில், “வழக்கு விசாரணையை நேரலையாக ஒளிபரப்புவது, நீதிமன்றத்தைத் தாண்டியும் மக்களிடம் சேரும் என்பதை வழக்கறிஞர்கள், நீதிபதிகள், நீதிமன்றத்தில் உள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீதிபதி ஸ்ரீஷானந்தா தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இதனால், அவருக்கு நோட்டீஸ் அனுப்புவதை தவிர்த்துவிட்டோம்,”இவ்வாறு தெரிவித்தார். கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா மன்னிப்பு கோரியதை குறிப்பிட்டு அவருக்கு எதிரான விசாரணையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முடித்து வைத்தது.

Related posts

கூட்டுறவு செயலி!

கடன் வாங்கும் முன் கவனியுங்கள்!

ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடு இந்தியா: லோவி மதிப்பீட்டு நிறுவனம் அறிவிப்பு!!