பாக். காதலனை கரம் பிடித்த இந்திய பெண் மீது கணவர் புகார்

ஜெய்ப்பூர்: பாகிஸ்தான் சென்று காதலனை திருமணம் செய்து கொண்ட இந்திய பெண் அஞ்சு மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.உத்தரபிரதேசம் கைலோர் கிராமத்தில் பிறந்த அஞ்சு(34) ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் தனது கணவர் அரவிந்த் குமாருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், முகநூலில் அறிமுகமான பாகிஸ்தானை சேர்ந்த ஆண் நண்பர் நஸ்ருல்லாவை சந்திக்க அஞ்சு, 30 நாட்கள் தங்கும் விசாவில் பாகிஸ்தான் சென்றார். பின்னர் இஸ்லாம் மதத்துக்கு மாறிய அஞ்சு நஸ்ருல்லாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து முதல் கணவரை முறையாக விவாகரத்து செய்யாமல் எல்லை தாண்டி சென்று வேறொருவரை மணந்த அஞ்சு மீது ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்ட காவல்நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு ஆல்வார் மாவட்ட பூல்பாக் காவல்நிலையத்தில் அரவிந்த் குமார், “தன்னை விவாகரத்து செய்யாமல் வேறொருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், தொலைபேசிய மூலம் நஸ்ருல்லாவும், அஞ்சுவும் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் புகார் அளித்துள்ளார். மேலும் அஞ்சு பாகிஸ்தான் செல்ல போலி ஆவணங்கள், கையெழுத்தை பயன்படுத்தினாரா என்பதை ஒன்றிய அரசு ஆய்வு செய்யவும் அரவிந்த் குமார் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி