7வது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர்: பாகிஸ்தான் அணி 1ம் தேதி சென்னை வருகிறது

சென்னை: 7வது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வரும் 3ம்தேதி முதல் 12ம் தேதி வரை சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற உள்ளது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், கொரியா, சீனா உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்க உள்ளன. சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பின் இந்த தொடர் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் ஹாக்கி அணி இந்தியா வருவதற்கு அந்நாட்டு அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து விளையாட்டு வாரியம் இதற்கான் அனுமதியை பெற்றுள்ளதாக பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பின் செயலாளர் ஹைதர் உசேன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணி வரும் 1ம்தேதி சென்னை வருகிறது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில், ஆகஸ்ட் 3ம் தேதி மலேசியாவுடன் ஆட உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஆகஸ்ட் 9ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

கோயில் நந்தவனங்களை பாதுகாக்க நடவடிக்கை: நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

கொட்டி தீர்த்தது கன மழை; குன்னூரில் மண் சரிவில் சிக்கி பள்ளி ஆசிரியை உயிரிழப்பு: கணவர், 2 மகள்கள் உயிர் தப்பினர்

புதுவை அரசின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படமாக `குரங்கு பெடல்’ தேர்வு: 4ம் தேதி விருது வழங்கப்படுகிறது