பாகிஸ்தானுக்கு ஏவுகணை ரகசியம் விற்ற இன்ஜினியருக்கு ஆயுள் சிறை: நாக்பூர் கோர்ட் தீர்ப்பு

நாக்பூர்: பாகிஸ்தான் உளவு அமைப்பான பிரமோஸ் நிறுவனத்தில் இருந்து ஏவுகணை பற்றிய தொழில்நுட்ப ரகசியங்களை விற்ற அந்த நிறுவன முன்னாள் இன்ஜினியருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நாக்பூர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்தியா மற்றும் ரஷ்ய நாடுகள் இணைந்து பிரமோஸ் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தை நாக்பூரில் அமைத்துள்ளன. 600 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள இலக்கையும் துல்லியமாகத் தாக்கும் பிரமோஸ் ஏவுகணைகள் இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிறுவனத்தில் இன்ஜினியராகப் பணியாற்றிய அகர்வால் என்பவர், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு ஏவுகணை தொழில்நுட்ப தகவல்களை விற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 2018ம் ஆண்டு ஏடிஎஸ் படையினரால் கைது செய்யப்பட்ட அவர் மீது தொழில்நுட்ப சட்டம், அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அகர்வால் இந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆய்வுப் பிரிவில் 4 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். மேற்கண்ட வழக்கு நாக்பூர் கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நீதிபதி எம்.வி.தேஷ்பாண்டே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அகர்வாலுக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் ஆயுள் தண்டனையும், அபராதமாக ரூ.3,000 விதித்து தீர்ப்பளித்தார்.

Related posts

நாகை அருகே 200 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

திருச்சூரில் அடர்வனத்தைவிட்டு வெளிவந்த காட்டு யானை: மக்கள் குடியிருப்புகளில் புகுந்ததால் பரபரப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்