பாகிஸ்தானை எளிதாக வென்ற இந்தியா; மந்தனா-ஷபாலி சிறப்பாக பேட் செய்தனர்: கேப்டன் கவுர் பாராட்டு

தம்புல்லா: 9வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி நேற்று பாகிஸ்தானுடன் மோதியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 19.2 ஓவரில் 108 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா 45, ஷாபாலி வர்மா 40 ரன் அடித்தனர். 14.1 ஓவரில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 109 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பவுலிங்கில் 3 விக்கெட் எடுத்த தீப்தி சர்மா ஆட்டநாயகி விருது பெற்றார்.

வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், எங்கள் பவுலர்கள் மற்றும் பேட்டிங்கில் மந்தனா, ஷபாலி சிறப்பாக தங்கள் வேலையை செய்தனர். முதல் ஆட்டம் எப்போதும் அழுத்தமான ஆட்டமாக இருக்கும். எங்கள் முழு யூனிட்டும் நன்றாக விளையாடியது. நாங்கள் அச்சமின்றி விளையாட விரும்புகிறோம், என்றார். அடுத்ததாக இந்தியா அணி நாளை யுஏஇ அணியுடன் மோதுகிறது.

Related posts

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.