பாக்.கில் பெட்ரோல் விலை உயர்வு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஈத் உல் அதாவையொட்டி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. தற்போது பாகிஸ்தானில் வரிகள் நிறைந்த 2024-2025ம் நிதி ஆண்டு தொடங்கி உள்ளது. இந்நிலையில் குறைக்கப்பட்ட எரிபொருள் விலையை அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவில் பெட்ரோல் மற்றும் அதி வேக டீசல் விலையை பாகிஸ்தான் அரசு உயர்த்தியுள்ளது.

இது குறித்து அந்நாட்டின் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘‘ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை பெட்ரோல் விலை லிட்டருக்கு பாகிஸ்தான் ரூபாய் 265.61ஆக இருக்கும். இதேபோல் டீசல் விலை 277.45 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்