ஒருநாள் போட்டியில் பாக். நம்பர் 1

துபாய்: ஐசிசி ஒருநாள் தர வரிசையில் பாகிஸ்தான் முதல் முறையாக முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டியிலும் அபாரமாக வென்ற பாகிஸ்தான் 4-0 என முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றிவிட்டது.

இதன் மூலம் ஐசிசி ஒருநாள் தரவரிசை வரலாற்றில் பாகிஸ்தான் முதல் முறையாக நம்பர் 1 அந்தஸ்தை வசப்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியா 2வது, 3வது இடங்களுக்கு தள்ளப்பட்டன. 1992ல் பாகிஸ்தான் ஒருநாள் உலக கோப்பையை வென்றாலும், ஐசிசி தரவரிசை அறிவிக்கப்பட்ட 2002ல் இருந்து இதுவரை பாக். ஒருமுறை கூட முதல் இடத்தை பிடித்ததில்லை. நியூசி.க்கு எதிரான தொடர் வெற்றி அதை சாத்தியமாக்கி உள்ளது. உலக கோப்பை போட்டிக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பாபர் ஆஸம் தலைமையிலான பாக். அணி மற்ற அணிகளுக்கு பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்