உலக கோப்பையில் முதல் முறையாக பாகிஸ்தான்-நெதர்லாந்து பலப்பரீட்சை

ஐதராபாத்: ஐசிசி உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் முதல் முறையாக பலப்பரீட்சை நடத்த உள்ளன. உலக தர வரிசயைில் சில நாட்கள் முன்பு வரை முதல் இடத்தில் இருந்த பாகிஸ்தான் ஆசிய கோப்பை போட்டிக்கு பிறகு 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆனாலும் பாபர் அஸம் தலையைிலான பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. ஆசிய கோப்பையை தவிர அதற்கு முன்பு நடந்த வங்கதேசம்(3-0), நியூசிலாந்து(4-1) அணிகளுக்கு எதிரான தொடரை பாக் தான் கைப்பற்றி உள்ளது.

எனவே பாக் முதல் ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தில் நெதர்லாந்தை வெல்ல முயற்சிக்கும். அதற்கு நெதர்லாந்து வாய்ப்பு அளிக்குமா என்பதுதான் கேள்வி.  காரணம் தர வரிசை அடிப்படையில் ஐசிசியின் நிரந்தர உறுப்பினரான பாகிஸ்தான் நேரடியாக உலக கோப்பையில் களம் காணுகிறது. ஆனால் ஐசிசியில் கூடுதல் பிரிவில் உறுப்பினராக இருக்கும் நெதர்லாந்து, உலக கோப்பைக்கான தகுதிச் சுற்றின் மூலம் முன்னேறிய அணி. அதிலும் தகுதிச் சுற்றில் நிரந்தர உறுப்பினர்களான 2முறை உலக சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் விளையாடியும் நெதர்லாந்து தகுதிப் பெற்றுள்ளது.

தகுதிச் சுற்றின் மூலம் உலக கோப்பை போட்டிக்கு நெதர்லாந்துடன் முன்னேறிய இன்னொரு அணி நிரந்தர உறுப்பினரான இலங்கை. அதனால் நெர்லாந்து இந்த உலக கோப்பையில் ஏதாவது அதிசயம் நிகழ்த்த முயற்சிக்கலாம். கூடவே நெதர்லாந்து அணியில் உள்ள பெரும்பான்மையான வீரர்கள் நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடும் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்தை பூர்விகமாக கொண்டவர்கள். அதனால் பாகிஸ்தான்-நெதர்லாந்து இடையிலான இன்றைய ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

*அணி விவரம்:

பாகிஸ்தான்: பாபர் அஸம்(கேப்டன்), ஃபகர் ஜமான், அப்துல்லா சபீக், இஃப்திகார் அகமது, இமாம்-உல்-ஹக், முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), சவுத் ஷக்கீல், அகா சல்மான், முகமது நவாஸ், முகமது வாசிம், ஷதாப் கான், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஷாகீன் ஷா அப்ரிடி, உசாமா மிர்.

நெதர்லாந்து: ஸ்காட் எட்வர்ட்ஸ்(கேப்டன்/விக்கெட் கீப்பர்), வெஸ்லி பர்ரேசி, மேக்ஸ் ஓ‘டவுத், விக்ரம்ஜித் சிங், கோலின் அகெர்மன், பஸ் டி லீட்ஸ், சைபிராண்ட் எஞ்செல்பிரிசெட், தேஜா நிடாமானூரு, சாகிப் ஜூல்ஃபிகர், ரூல்ஃப் வான் டர் மெர்வ், ஆர்யன் ததத், ரேயன் கிளய்ன், ஷாரிஸ் அகமத், லோகன் வான் பீக், பால் வான் மீகெரன்.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை