பாகிஸ்தான் பொது தேர்தலில் முதல் முறையாக இந்து பெண் போட்டி: புனார் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த சவீரா பிரகாஷ்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பொது தேர்தலில் இந்து பெண்ணான டாக்டர் சவீரா பிரகாஷ் என்பவர் போட்டியிடுகிறார். பாகிஸ்தானில் வரும் 2024ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் புனர் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் சவீரா பிரகாஷ் என்ற இந்து பெண் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். பொது தொகுதிகளில் ஐந்து சதவீத பெண் வேட்பாளர்கள் போட்டியிடலாம் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதையடுத்து பிகே 25 என்ற பொதுத் தொகுதியில் சவீரா பிரகாஷ் போட்டியிட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.

அவரது தந்தை ஓம் பிரகாஷ், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிரதிநிதியாக இருந்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு அபோதாபாத் சர்வதேச மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்ற சவீரா, தனது படிப்பை முடித்தவுடன் அரசியல் களத்தில் நுழைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பாகிஸ்தான் பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன். அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க விரும்புகிறேன். பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஒழிப்பதே முதல் முன்னுரிமை. எனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அரசியல் பணிகளை மேற்கொள்ள விரும்புகிறேன்’ என்றார்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்