முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சிக்கு தடை: பாகிஸ்தான் அரசு முடிவு

பாகிஸ்தான்: முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியை 1996ஆம் ஆண்டு இம்ரான் கான் தொடங்கினார்.  கடந்த 2018ஆம் ஆண்டு முதல்முறையாக அவர் ஆட்சியைக் கைப்பற்றினார். எனினும், 2022ஆம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஆட்சியை இழந்து தோல்வியை சந்தித்தார். பின்னர், ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில், இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இலங்கையில் மே 9ஆம் தேதி நடந்த சம்பவத்தில் அப்போது பாகிஸ்தானை ஆட்சி செய்த பிடிஐ கட்சிக்கு தொடர்பு, சர்வதேச நாணய நிதியகத்துடனான பாகிஸ்தானின் ஒப்பந்தத்தை சீர்குலைக்க பிடிஐ தலைவர்கள் முயற்சி செய்தது உள்ளிட்ட தேசதுரோக செயல்கள் வெளிச்சத்துக்கு வந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒளிபரப்புத்துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் இஸ்லாமாபாத்தில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், இம்ரான் கான் கட்சிக்கு தடை விதிப்பது தொடர்பாக பாகிஸ்தான் அரசு உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தரார் தெரிவித்துள்ளார்.

 

Related posts

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த சமோவா வீரர்

ஒரே ஆண்டில் 2 ஏடிபி டைட்டிலுடன் சின்சினாட்டி கோப்பையை வென்று சின்னர் சாதனை