108 வயதிலும் வாக்களித்த பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டி

மேட்டுப்பாளையம்: பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி 108 வயதிலும் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு துவங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவிற்காக காலை முதல் ஆண்கள், பெண்கள், இளம்பெண்கள், இளைஞர்கள் என நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

அந்த வகையில் காரமடையை அடுத்துள்ள தேக்கம்பட்டி பகுதியில் வசிக்கும் பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி (108) தள்ளாத வயதிலும் ஆட்டோவில் தேக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றும் விதமாக வாக்கினை பதிவு செய்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது ஜனநாயக கடமை. அதனை பிரதிபலிக்கவும், ஒரு வழிகாட்டி இருக்கவுமே வாக்களிக்க வந்தேன்’’ என்றார்.

Related posts

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு..!!